LawRato

What are the procedures for changing property to a other name


19-Feb-2025 (In Property Law)
அம்மா இறந்த பின் அந்த சொத்து என் பெயருக்கு ரிஜிஸ்டர் செய்வதற்கு என்ன வழிமுறைகள் உள்ளது. அதற்கு என்ன ஆவணங்கள் தேவை என்று கூறுங்கள். நன்றி
Answers (2)

Answer #1
560 votes
hi, I can well understand your concern from the query raised, you will need the document, legal heirship certificate, patta, chitta, for a smooth transition of title deed from your mother to you, thank you, you can contact me for further clarifications
Helpful? LawRato LawRato
Answer #2
834 votes
உயில் அல்லது செட்டில்மென்ட் ஆவணம் ஏதும் ஏற்பாடு செய்யாமல் ஒரு நபர் இறந்தால்; அவர் இறந்த பின்பு, அந்த நபரின் சொத்துக்கள் அணைத்தும், அந்த நபரின் வாரிசுதாரர்கள் அனைவருக்கும் உரிமையுடையதாகும்.. அவரின், வாரிசுதாரர்கள் அணைவரும் தங்களது பிரிவின்றி உள்ள பாகத்தை- பாகப்பிரிவினை செய்து பிரித்துக்கொள்ளலாம்; பாகம் பிரிக்க இயலாது இடமாகவோ அல்லது பாகம் வைத்தால் அந்த சொத்து பயன் பெறாதெனில், அந்த சொத்தை வாரிசுகளில் ஒருவர் மற்ற வாரிசுதாரர்களிடமிருந்து செட்டில்மென்ட் மூலமாகவோ/விடுதலை ஆவணமாகவோ/தேவைப்பட்டால் கிரயமாகவோ(கைமாறு கொடுத்து) அந்த நபர் பெற்று கொள்ளலாம். இவற்றிற்கு இயலாத பட்சத்தில், அணைத்து வாரிசுதாரர்களும் அந்த சொத்தை விற்பனை செய்து அவரவர் பாகத்திற்கான பங்கு தொகையை பெற்றுக் கொள்ளலாம். ஒருவேளை, இறந்த நபருக்கு ஒரே வாரிசாக இருந்தால் அந்த சொத்தின் முழு உரிமை, அந்த நபருக்கு கிடைக்கும். அதே சமயம், இறந்த நபருக்கு முன்னதாகவே அந்த நபரின் வாரிசுதாரர்களில் எவரேனும் ஒருவர் இறந்துவிட்டால், அந்த நபரின் வாரிசுதாரர்களை மேற்படி பாகபிரிவில் சேர்க்க வேண்டும்.
Helpful? LawRato LawRato

Disclaimer: The above query and its response is NOT a legal opinion in any way whatsoever as this is based on the information shared by the person posting the query at lawrato.com and has been responded by one of the Divorce Lawyers at lawrato.com to address the specific facts and details.

Report abuse?

Comments by Users

No Comments! Be the first one to comment.

"lawrato.com has handpicked some of the best Legal Experts in the country to help you get practical Legal Advice & help."